Kogilavani / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு, தென்னிந்திய பாடகர்கள் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி, நுவரெலியா கிரகறி வாவி மைதானத்தில், எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் கானா பாடல்புகழ் ஸ்ரீகாந்த் தேவா, பிரபல பின்னணி பாடகிகளான அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்புகழ் பரீதா மற்றும் ஸ்ரீ ராம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற ஒரு தொகை பணம், மலையகத்தில், க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்விக் கருத்தரங்குகளுக்காக வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வுக்கு, இலங்கையின் பிரபல இன்னிசைக் குழுவான மோகன் ராஜின் அப்சராஸ் இசை குழுவினர், இசை வழங்க உள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago