2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ம.ம.மு.வின் தலைவராக இராதா தெரிவு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 'அபேகம' விருந்தகத்தில் நேற்று(8) நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த ஏ.லோரன்ஸ், 'மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் கொள்கைக்கும் அவர் மலையக மக்களின் மீது வைத்திருந்த பற்றுக்கும் ஏற்ப, இனிவரும் காலங்களில் மலையக மக்கள் முன்னணி செயற்படும்.

மலையக மக்களின் வளர்ச்சிப் பாதையில் அமரர் சந்திரசேகரனின் பங்கு எத்தகையதோ அதேபோன்று எதிர்காலத்;தில்; வேலைத்திட்டங்களும் புரட்சிமிகு கொள்கைகளும்; முன்னெடுக்கப்படும்;' என்றார்.  

'மலையக மக்களின் பல்வேறுபட்ட வளர்ச்சிக்கு, முன்னணி காரணமாக இருந்துள்ளது. அதேபோல் மலையகத்தில் 7 பேர்ச் காணியும் தனி வீட்டுத்திட்டத்தினூடாக கிராம எழுச்சித் திட்டத்தை உருவாக்கிய பெருமையும் முன்னணிக்கு உண்டு. மலையக கட்சி என்ற ரீதியில், இன பிரச்சினைக்கு உலகளாவிய ரீதியில் தீர்வை பெற்றுக்கொடுக்க பாடுப்பட்ட கட்சி என்ற பெருமை முன்னணியையும் அமரர் சந்திரசேகரனையும் சாரும்.

இவ்வாறு மலையகத்துக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் சமாதானத்துக்காகவும் பாடுப்பட்ட இக்கட்சி, எதிர்காலத்தில் புதிய தலைமைத்துவத்தின் கீழ் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .