2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் பாடசாலைகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளையும் விரைவில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அக்குறணை - தெலும்புகஹவத்தை முஸ்லிம் பாடசாலை, அப்பிரதேச சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து நடாத்திய இப்தார் நிகழ்வு, கிங்ஸ்கோட் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹலீம்,

“நாட்டில் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் அது மத்திய அரசாங்த்துக்கு உடையதாக இருந்தாலும், மாகாண சபைகளுக்குடையதாக இருந்தாலும் பல சிக்கள்களை முன் நோக்கி உள்ளன. தேசிய பாடசாலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குழுக்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாமை முக்கிய பிரச்சினையாக உள்ளது.

மாகாண சபைகளின் கட்டப்பாட்டிலுள்ள பாடசாலைகளில் பல குறைபாடுகள் உள்ளன. ஆகவே, கல்வி அமைச்சருடன் இது தொடர்பாக கலந்துறையாடியதன் பிரதிபலனாக கண்டி மாவட்டத்தில் மட்டுமல்லாது, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு ஒரு நிரந்தர அதிபர் இல்லாமல் இருப்பதும் ஒரு பாரிய குறையாக உள்ளது. வெகு விரைவில் அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு ஒரு நிரந்தர அதிபர் நியமிக்கப்படுவார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .