Sudharshini / 2016 மார்ச் 15 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட வனராஜா கிராமசேவகர் பிரிவுக்கான அபிவிருத்திகளை அடையாளம் காணும் மக்கள் சந்திப்பொன்று, வனராஜா கிராமசேவகர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) மாலை நடைபெற்றது. பிரதேச கிராம உத்தியோகத்தர் எஸ்.டார்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வனராஜா பிரிவுக்குட்டபட்ட 9 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, 2016, 2017 மற்றும் 2018 ஆகிய மூன்றாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின்போது குடிநீர் விநியோகம், பாதை அபிவிருத்தி, விளையாட்டு மைதானம், பாலம் அமைத்தல் போன்றவை தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டது.

56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago