2026 ஜனவரி 21, புதன்கிழமை

மகனை தாக்கிய தந்தை கைது

Kogilavani   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா 

மதுபோதையில் தனது எட்டு வயது மகனை கடுமையாக தாக்கிய தந்தையை, வெல்லவாய பொலிஸார் இன்று (1) கைதுசெய்துள்ளனர்.

வெல்லவாய, வெஹரயாய கிராமத்தைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வீடு வந்த குறித்த நபர், தனது சொற்படி மகன் நடக்கவில்லையென்று தெரிவித்து,  சிறுவனை கடுமையாகத் தாக்கியுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுவன், மறுதினம் பாடசாலைக்குச் சென்றுள்ளதுடன், மிகவும் சோர்வடைந்த  நிலையில், வகுப்பறையில் அமர்ந்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த  பாடசாலையின் அதிபர்,  சிறுவனிடம்  காரணத்தை வினவியுள்ளார். இதன்போது சிறுவன் தனது தந்தை தாக்கியமை தொடர்பில் அதிபரிடம் தெரிவித்துள்ளதுடன் தனது உடலில் ஏற்பட்ட காயங்களையும் அதிபருக்குக் காட்டியுள்ளார்.

இவ்விடயத்தை அதிபர் வெல்லவாய பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

பாடசாலைக்குச் சென்ற பொலிஸார்  சிறுவனை வெல்லவாய அரசினர் மருத்துவ மனையில் அனுமதித்தனர். 

சிறுவனின் வாக்குமூலத்துக்கு அமைய சிறுவனின் தந்தையை கைதுசெய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X