Editorial / 2026 மார்ச் 24 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
கேகாலையிலிருந்து ஹட்டன் - குடகம பகுதியிலுள்ள மர ஆலை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மகோகனி மரக்கட்டைகளை (சிலாகை) ஹட்டன் பொலிஸாரும் வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து சனிக்கிழமை (22) பிற்பகல் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த மரக்கட்டைகளைக் கொண்டு செல்வதற்கான எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்களும் இன்றி, பொலிஸாரின் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காகப் பருத்தி மற்றும் பஞ்சு மூட்டைகளினால் மறைக்கப்பட்டு இவை கடத்தி வரப்பட்டுள்ளன. எனினும், கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் நிசங்க கொடமுல்ல ஆகியோரின் ஆலோசனையின் பேரில், குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி நிசாந்த டி சில்வா தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த அதிரடிச் சோதனையை முன்னெடுத்தனர்.
கைப்பற்றப்பட்ட மரக்கட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸாரும் வனப்பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.




15 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago