2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மக்களைத் தெளிவுப்படுத்தும் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

ஒன்றிணைந்த தொழில்சங்க மய்யம் மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் இணைந்து, நுவரெலியா அரச தனியார் ஊழியர்களைக் தெளிவுபடுத்தும் வகையில்,   துண்டு பிரசுரம் விநியோகிக்கும்  நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்த அமைப்பின்  அமைப்பாளர் பாஸ்கர் தலைமையில் நுவரெலியா நகரில் நேற்று(14) புதன்கிழமை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. . 

நுவரெலியா பிரதான தபாலக ஊழியர்களுக்கும் நுவரெலியா மாவட்ட செயலகம் , நுவரெலியா பிரதேச செயலகம் உட்பட அரச நிறுவனங்களின்  ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இந்த துண்டுபிரசுரத்தில்   2022 ஆம் ஆண்டு ஜனாதிபதியால் சமர்பிக்கபட்ட வரவு செலவு திட்டத்தில்  அரச,தனியார் ஊழியர்களின் சம்பள உயர்வோ, வேறு எந்த கொடுப்பனவே  வழங்க முன் மொழியவில்லை.  மாறாக அரச ஊழியர்களின் சேவை காலம் மட்டுப்படுத்தும் திட்டமும் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களைக் தனியார் மயபடுத்தவும், வேலையும் முன்மொழியபட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்த வருடம் ஜுலை வரையிலான வாழ்க்கை செலவுகள்146.5 முதல் 244.4 வரை உயர்ந்துள்ளது.  உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

 ஆனால் அரச மற்றும்  தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படவில்லை.

 எனவே அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பெருந்தோட்ட  ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும். விசேட கொடுப்பனவுகளும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த துண்டு பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X