Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக, கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.
மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளை, நேரடியாகக் கண்டு அவர்களின் கவலைகளை கேட்டு சரியான தெளிவொன்றை பெற்று நிவாரணங்களை வழங்குவதே, ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவுக்கே, ஜனாதிபதி முதல் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு முதல் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கிராமிய மக்கள், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளால் அல்லல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் மேற்கொண்ட விஜயங்களின்போது அது தெளிவாகியதாகவும் குறிப்பிட்டார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago