Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 03 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஹப்புத்தளை, மவுசாகலை தோட்டத்தின் பெரும் பகுதி, மண்சரிவுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதால், மவுசாகல தோட்டப் பாதையை புனரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட எம்.பி அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
மவுசாகலைப் பாதை புனரமைப்பு தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“மவுசாகலை பாதையானது, ஏழு கிலோமீற்றர் தூரம் உள்ளது. இதற்கென 35 மில்லியன் ரூபாயைச் செலவிட வேண்டியுள்ளது. மவுசாகல பாதை அபிவிருத்திக்காக, இப்பெரிய தொகையை செலவழிப்பதில் எவ்வித பயனும் இல்லை. ஆகையினாலேயே, நிதியொதுக்கீட்டை இடைநிறுத்தியுள்ளேன். அத்துடன், அத்தோட்ட மக்களை, பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, தம்பேதன்ன தோட்டத்தில், டி.பி.டி பிரிவு பாதை, தியகுல்ல பிரிவு பாதை, பீட்டரத்மலை கீழ் பிரிவு பாதை, மாக்கந்தை பாதை, பழைய காட்டுப் பிரிவு பாதை ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்காக, எனது செயற்றிட்ட நிகழ்ச்சி வரைபில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
அத்துடன், டி.பி.டி பிரிவுப் பாதை உள்ளிட்ட இரு பாதைகளின் வேலைகள், தற்போதைய நிலையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட பாதைகளுக்கான நிதியொதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாக்கந்தை தோட்டத்தில், மூன்று கிலோமீற்றர் பாதையின் புனரமைப்பு, இவ்வருடத்தில் நிறைவு செய்யப்பட்டுவிடும்.
மேலும், ஹப்புத்தளை பகுதியின் ஹல்துமுல்லை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய வளாகத்தில், 50 இற்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையில், வாகன தரிப்பிட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்” என்றார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago