Editorial / 2017 நவம்பர் 25 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், பி.கேதீஸ்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வளைவுப்பகுதியில் இன்று அதிகாலை 01 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி மணல் எற்றிச் சென்று கொண்டிருந்த லொறியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் வேகத்தைக் கட்டுபடுத்த முடியாமலும், தடுப்புக்கட்டை செயழிழந்ததன் காரணமாகவும், இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
16 minute ago
28 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
46 minute ago
56 minute ago