Janu / 2026 மார்ச் 29 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைதளங்களில் பரவும் காணொளியின் அடிப்படையில், ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று சக மாணவர் ஒருவரை தாக்கும் காணொளி வெளியானதை தொடர்ந்து, இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவம் இந்த மாத தொடக்கத்தில் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன், சக மாணவன் ஒருவன் புகைப்பிடித்ததாக வகுப்பாசிரியரிடம் முறையிட்டதே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் மேலும் இரு மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது பாடசாலை அதிபர் தலையிட்டு, விடயத்தை உள்வாரியாக தீர்க்க முயன்றதால் ஆரம்பத்தில் எவ்வித முறைபாடும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி மன உளைச்சலை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட மாணவனும் அவரது தாயாரும் சனிக்கிழமை (28) அன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் காணொளியை பகிர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மாணவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மாணவர்கள் ஹட்டன் மற்றும் டிக்கோயா பகுதிகளை சேர்ந்தவர்களாவர். ஹட்டன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
13 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
53 minute ago
59 minute ago