2025 ஜூலை 23, புதன்கிழமை

மண்சரிவால் வீடு சேதம்: நால்வர் வெளியேற்றம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன், சமனலகம பகுதியில், இன்றுக் காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவால், வீடொன்று சேதமாகியுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மண்சரிவு காரணமாக, வீட்டின் சமயலறை மற்றும் அறையொன்று சேதமாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார்,  வீட்டிலிருந்த நால்வருக்கும் எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மண்சரிவு அனர்த்தம் உள்ளதால், மேற்படி நால்வரும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்களை தற்காலிக வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .