Kogilavani / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்தின்
மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சிநிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக, கடந்த 26ஆம் திகதி, ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்ஙிரஸின் ஆதரவளர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின்போது, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவரின் வர்த்தக நிலையத்திக்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, மேற்படி ஐவரையும் ஹட்டன் பொலிஸார், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்ததுடன் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
இந்நிலையில், மேற்படி ஐவரும் இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜபடுத்தவுள்ளனர்
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago