Editorial / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (21.10.2025) மத்திய மாகாண ஆளுநரால் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கு மத்திய மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago