Gavitha / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை நகரில் விற்பனை செய்யப்படும் அநேகமான மரக்கறிகள், நகரை அண்மித்து ஓடும் அசுத்தமான ஆற்று நீரிலேயே கழுவப்படுவதாக, நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வாராந்த சந்தையில் மாத்திரமல்லாது, தினச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மரக்கறிகளும் இவ்வாறு அசுத்த நீரில் கழுவப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலாங்கொடை நகரத்தை ஊடறுத்துச் செல்லும் தொரவல ஆற்று நீர், முறையாக வடிந்து செல்லும் கால்வாய் வசதியின்றி ஒரே இடத்தில் தரித்து நிற்பதால், இந்நீர் அசுத்தமடைந்திருப்பதாக, சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, நகரில் வியாபாரம் செய்யும் வியபாரிகளுக்கு, மரக்கறிகளை இலகுவாக கழுவி துப்பரவு செய்யும் வகையில், குழாய் நீர் வசதிகளை செய்து கொடுக்க நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
22 minute ago
34 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
39 minute ago
47 minute ago