Kogilavani / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் மீண்டும் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவை மையமாகக் கொண்டே இவ்வமைப்பு உருவாக்கப்படவுள்ளது என்றும் அவ்வமைப்புக்கு தேசிய மக்கள் பேரவை என்று பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இது சம்பந்தமான, முக்கிய கூட்டமொன்று கடந்த 08ஆம் திகதியன்று நுவரெலியா நகரில் உள்ள வர்த்தகர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
முதல் சந்திப்பில், கடந்த காலங்களில் பிரதேச சபை தலைவர்களாக, உறுப்பினர்களாக , நகர மாநகர சபை உறுப்பினாகளாக இருந்தவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மலையகத்தின் எதிர்கால கலை , கலாசார, சமூக அபிவிருத்தி, கல்வி தொழிலாளர்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் தாங்கள் செயற்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தாங்கள் ஒரு தனிக்குழுவாக போட்டியிட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
28 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago