Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கு.புஷ்பராஜா, ஆர்.ரமேஷ்
நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நானுஒயா, தலவாக்கலை, லிந்துலை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 31 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிளங்டன் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் பிள்ளை பரமாரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆகுரோவா தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமாகியுள்ளதுடன் தோட்டத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளிலும் மண்மேடு குவிந்துள்ளது.
இதேவேளை, அக்கரபத்தனை நல்லதண்ணி தோட்டத்தில் மண்சரிவால் 3 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. லிந்துலை திஸ்பனை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
டயகமத்திலிருந்து தலவாக்கலை செல்லும் பிரதான வீதி, ஹோல்புறூக் பாடசாலைக்கு முன்பாக மண்மேடு சரிந்து விழுந்ததில் நேற்று இரவு முதல் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.
அத்தோடு லிந்துலை பெசிபன் தோட்ட பிரதான வீதியில் பாரிய கற்பாரைகள் சரிந்து விழுந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கார்லிபெக் தோட்டத்தில் ஆற்று வெள்ளம் வீடுகளுக்குள் உட்புகுந்ததால் தோட்டத்தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை, இத்தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததால் இரண்டு குடியிருப்புகள் முற்றாக சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago