2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

‘மலசலக்கூடத்தைத் திறந்து வைக்கவும்’

Gavitha   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அக்கரப்பத்தனை பிரதேசசபை, பசுமலை மக்களின் வரிப்பணத்தில் நகருக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்களின் நன்மை கருதி 5 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணித்த மலசலக்கூடம், இன்னும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படாமல் உள்ளது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நகரில் மலசலக்கூடம் ஒன்று இன்மையால்,  பலரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தமையாலேயே, இந்த மலசலக்கூடம் அமைக்கப்பட்டது என்றும் ஆனால், இது இன்னும் மக்கள் பாவனைக்காக ஏன் திறந்து வைக்கப்படாமல் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த மலசலக்கூடம், தற்போது குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது என்றும் எனவே, இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X