2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மலேசியாவில் பொயிலர் வெடித்து இளைஞன் மரணம்

Editorial   / 2024 மே 12 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மலேசியாவுக்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞன்  அங்கு பொயிலர் வெடித்து மரணித்துள்ளார்.

  மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் (வயது 24 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.  

இலங்கையில் இருந்து மலேசியாவில் உள்ள மினரல் வோட்டர் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் பணிக்கு சென்றிருந்தார். இந்த அனர்த்தம், ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. அவரது சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இறுதி கிரியைகள்   நல்லடக்கம் ப்ரௌன்ஸ்வீக் மொன்டிஹம் பொது மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெறவிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X