2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’மலையக இளைஞர்களையும் உள்வாங்கவும்’

Kogilavani   / 2021 மார்ச் 09 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியத்தின் பார்வை என்ற தொனிப்பொருளில், திறன் அபிவிருத்தியுடன் கூடிய கட்டுமானக் கலைஞர்களைப் பயிற்றுவித்தல் தேசிய செயற்றிட்டத்தில், மலையக இளைஞர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், 'திறன் அபிவிருத்தியுடன் கூடிய கட்டுமானப் பயிற்சிகளை வழங்கும் தேசிய செயற்றிட்டத்தின் பிரகாரம், தேசிய அபிவிருத்திக்கு உதவும் மனிதவளத்தை மேம்படுத்தும் 'சிரம சிக்குரு' வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இப் பயிற்சிக்கான விண்ணப்படிவங்களை, மலையக மக்கள் முன்னணியின் பதுளை பணிமனை, மாவட்டப் பணிமனைகள் மற்றும் எமது உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். 

'இதற்குப் புறம்பாக விண்ணப்பப் படிவங்களை, மாவட்ட ஒருங்கிணைப்புத் தளங்கள், கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள 'சவ்சிரியாய', கட்டுமான தொழில் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். 

விண்ணப்பபடிவங்களை முறையாகப் பூர்த்தி செய்து, இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்பு, 'பணிப்பாளர் நாயகம், நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, 'சவ்சிரியாய', 123, விஜேராம மாவத்தை கொழும்பு – 07' என்ற முகவரிக்கு, பதிவுத் தபாலில் அனுப்புமாறும் அவர் அறிவுறுத்திளள்ளார். 

இந்தப் பயிற்சி தொடர்பான மேலதிக விவரங்களை, தமது பதுளை பிராந்திய பணியகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும்  கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை, மலையக இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்படிவத்தின் பிரதியொன்றை, தமது பதுளை பிராந்திய பணியகத்தில் ஒப்படைக்குமாறும் அவர் விண்ணப்பதாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X