Kogilavani / 2021 மார்ச் 17 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பொதுமயான பூமி, வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுவருவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படிப் பொது மயானப்பகுதி, தற்போது தனியார் தேயிலை தோட்ட பாவனையில் உள்ளதாகத் தெரிவித்த பிரதேசவாசிகள், குறித்த பகுதியிலுள்ள கருப்பன் தேயிலை மரங்கள் வெட்டியகற்றப்படுவதால், பாரவூர்திகள் குறித்த பகுதியிலுள்ள கொங்ரீட் பாதையூடாக பயணிப்பதாகவும் இதனால் மயானபூமிக்கான பாதை சேதமடைவதாகவும் தெரிவித்தனர்.
மயானத்தைப் பாதுகாப்பதுத் தொடர்பில், மஸ்கெலிலா பிரதேசசபை, மஸ்கெலியா மரணாதார சங்கம் மற்றும் மஸ்கெலியா வாழ் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026