Kogilavani / 2021 மார்ச் 08 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள், ஆ.ரமேஸ்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர், கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளார் என்று, நுவரெலியா மாவட்ட சுகாதார உதவிப் பணிப்பாளர் இமேஸ் பிரதாப் சிங் தெரிவித்தார்.
மஸ்கெலியாவைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மேற்படி நபர், தனது பிரதேசத்தில் 6ஆம் திகதி நடைபெற்ற கோவில் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், திடிரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினமே அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று (8) வெளியாகிய நிலையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரது உடல் பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்படவுள்ளது.
அந்நபருடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026