Freelancer / 2021 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
மஸ்கெலியாவில் சுகாதார விதிமுறைகளை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 5 வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளினால் நேற்று (06) மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் போதே 5 வர்த்தக நிலையகளும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொரோனா மரணங்களும் பதிவாகி உள்ளன.
இதனையடுத்து நகரில் சகல வர்த்தக நிலையங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் சுகாதார விதிமுறையை பேணாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. R
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago