2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மஹிந்த ஒரு செயல்வீரர்; இ.தொ.கா.வாழ்த்து

Kogilavani   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நெஞ்சில் உறுதியும் நேர்மையுமான ஒரு துணிச்சலான செயல் வீரரான முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டமை மிகப் பொருத்தமானதும் போற்றத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும்' என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

மஹிந்த தேசப்பிரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்து ,லங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக உப- தலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இலங்கையின் ,றைமைக்கும் சட்டத்துக்கும் அமைவாக மஹிந்த தேசப்பிரிய அவரது காலத்தில் நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டார். அவரது தலைமையில் நடைபெற்ற தேர்தல்களில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பன  முக்கிய இடங்களை வகிக்கின்றன' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .