2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாகுடுகலை தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 மார்ச் 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

தேயிலை மலைகளில் வளர்ந்துள்ள புற்களை அழிப்பதற்கு, களைநாசினியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரியும் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இராகலை-மாகுடுகலை மற்றும் கிளன்டவன் தொழிலாளர்கள், இன்று(19) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாகுடுகலை தோட்டத்தில் மூடியுள்ள தொழிற்சாலைக்கு முன்பாக, இன்று காலை சுமார் ஒரு மணித்தியாலம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேயிலைத் தோட்டங்கள் காடுகளாகியுள்ளதால், தாம் உயிரச்சத்துடனேயே பணிப்புரிய வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கும் தொழிலாளர்கள் இதனால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே தோட்ட நிர்வாகம் தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X