2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

’மாடி வீடு என்ற போலி கதைகளை நாம்பாதீர்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்      

மாடிவீடு என்ற போலிக் கதைகளை நம்பவேண்டாம் என்றும் தனி வீட்டுத் திட்டத்தையே தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும்  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாசார நிலையத்தின் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று (30) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், “ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஐயாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு இவ்விடத்துக்கு வருவோம். அன்று எனது தந்தை எம்மை அழைத்துவந்தார். இன்று அவர் இல்லை. அது பெரும் துயரைத் தருகின்றது. இருந்தாலும் நல்லுள்ளங்களைத் தேடிவைத்துவிட்டே எனது தந்தை சென்றுள்ளார். அவர்கள் இன்று என்னை அரவணைக்கின்றனர்.  

“மலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடலை மேற்கொண்டோம். மாடி வீடு, மாடி வீடு என அது தொடர்பில் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. கூரைக்குப் பதிலாக 'கொங்ரீட்' போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே, போலித் தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும். 

“சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பிலும் கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம். 

“அதேவேளை, கலைஞர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கிகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள் வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கிகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்க முடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .