Editorial / 2017 நவம்பர் 23 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டன் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் 5 மாடிக் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நாவலப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.பியந்த என்பவர், கண்டி வைத்தியசாலையில் நேற்றுக் காலை அனுதிக்கப்பட்டுள்ளாரென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே, தவறி கீழே விழுந்துள்ளார்.
மேற்படி நபர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் அனுமதியின்றி மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நகரசபையின் செயலாளர் எஸ்.பிரியதர்சினி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago