Kogilavani / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஊவா மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கால்கோள் விழாவுக்குச் சென்ற மாணவர் ஒருவர், விபத்தில் பரிதாபகரமாக உயிழந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அரவிந்தகுமார் எம்.பி, வாகன சட்டதிட்டங்கள், விதிமுறைகள் முறையாகவும் கிரமமாகவும் பேணுவதற்குரிய நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
'கடந்த 15ஆம் திகதி பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலய வீதியில் ஏற்பட்ட விபத்தில், வருண் பிரதீஸ் என்ற சிறுவன் பலியாகியுள்ளார். இதுபோன்ற விபத்து முதலும் இறுதியுமாக இருக்க வேண்டும்.
'இந்நுழைவாயிலில் எரிபொருள் நிலையம், ஓட்டோ தரிப்பிடங்கள் இருந்து வருவதுடன், பாதசாரிகள் கடவையும் போடப்படவில்லை. சன நடமாட்டம் மிகுதியாகவுள்ள இவ்விடத்தில் வாகன நெறிசல்களும் அதிகமாகவேயுள்ளன.
'பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப வகுப்புகளே நடைபெறுகின்றன. 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களே இங்குக் கல்விப் பயில்வதால், அவர்கள் பாதுகாப்புடன் சென்று திரும்பக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்' என்று, அரவிந்தகுமார் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026