2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

மாணவர்களை இலக்குவைத்து போதைப் பொருள் விற்பனை

Kogilavani   / 2021 மார்ச் 18 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் மாணவர்களை இலக்குவைத்து, மருந்தகங்களில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக, பாதுகாப்புத் துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவர்கள், கிராம தோட்டப் பகுதி இளைஞர்களை இலக்குவைத்தே இந்தப் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் போதையை ஏற்படுத்தவல்ல போதைப் பொருட்களை விற்பனை செய்துவந்த இந்த மருந்தகங்களில், தற்போது குறுகிய காலத்தில் உடல்,உள,உயிர் பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல குளிசைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணைகளில்  கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் சில கொடிய நோய்களுக்குப் பயன்படுத்தும் குளிசைகள் எனவும் வைத்தியர்களின் சிபாரிசு இன்றி விநியோகிக்க முடியாத இந்த உயிராபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய குளிசை வகைகள் கொள்ளை விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போதை குளிசை ஒன்றின் விலை 10 முதல் 20 ரூபாயாக உள்ள போதிலும் இவை 200 தொடக்கம் 250 வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த போதை குளிசை விற்பனை தரகர்கள் மூலம் மிகவும் சூட்சுமுமாக மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X