Editorial / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில், இம்முறை பெரிய வெங்காயச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக, மாத்தளை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பெரும்போகத்தில், 828 ஹெக்டெயர் நிலப்பரப்பிலேயே, பெரிய வெங்காயச் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயச் செய்கையானது, 2,396 ஹெக்டெயர் நிலப்பரப்பில் செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதும் மழை காரணமாக இச்செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரிய வெங்காயத்தின் தேசிய தேவைக்கு மாத்தளை மாவட்டம் அதிகம் பங்களிப்பு செய்துள்ள நிலையில், சில வருடங்களாக இங்கு பெரிய வெங்காயத்தின் செய்கை வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாகாண மற்றும் மத்திய அரசாங்கத்தின் விவசாய திணைக்களத்தின் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக பெரிய வெங்காய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதன் பலனை மக்கள் பெறமுடியாதுள்ளனர் என விவசாய அமைப்புகளின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago