2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மாத்தளையில் தேசிய குடிநீர் திட்டத்தால் 78 சதவீத அசுத்த நீர் விநியோகம்

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்தில் தேசிய குடிநீர் திட்டத்தால் வழங்கப்படும் நீரில் 78 சதவீதமானவை அசுத்தமான நீராக இருப்பதாக, மாத்தளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கோட்டேகொட தலைமையில் நேற்று (15) நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு கிராமிய மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 232 குடிநீர் திட்டங்களில் 108 திட்டங்கள் செயழிலந்துள்ளது. இவ்வாறான திட்டங்கள் அரசியல்மயமாக்கல் காரணமாக, செயழிலந்து காணப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த இந்தத் திணைக்களத்தின் மாத்தளை மாவட்ட பிரதானி எச்.பி. விஜேசிங்க, தூய்மையான குடிநீரை வழங்குவதற்காக குளோரின் இயந்திரங்கள் 50 பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை 100ஆக அதிகரிக்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .