2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாயமான பெண் பரீட்சார்த்திகள் இருவர் மீட்பு

Editorial   / 2024 மே 16 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராத பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் மாயமான பரீட்சார்த்திகளான மாணவிகள் இருவர், உறவினர்களின் வீட்டிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

இவ்விரு மாணவிகளும், பரீட்சைக்கு செவ்வாய்க்கிழமை (14) சென்றிருந்த நிலையில், கடுவெலவில் உள்ள உறவினர்களின் வீட்டில் இருந்தனர் என  புதன்கிழமை (15) இரவு கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

வேலையை வாய்ப்பை தேடி இவ்விருவரும் கொழும்புக்கு சென்றனர் என்றும், கடுவெல பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு புதன்கிழமை (15) இரவு சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

கடுவெல பிரதேசத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் இருவரும் அவர்களின் உறவினர்களினால் கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்துக்கு வியாழக்கிழமை (16) அழைத்துவரப்பட்டனர். அவ்விரு சிறுமிகளும் அறிவுறுத்தப்பட்டனர் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X