Janu / 2024 மே 14 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை, கலமுதுன- மீனகொல்ல தோட்ட பகுதியில் திங்கட்கிழமை (13) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில், மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த 11 கால் நடைகளில், மூன்று கரவை பசுக்கள் உட்பட நான்கு கால்நடைகள் பலியாகியுள்ளன.
அந்த தோட்டத்தில் வசித்துவரும் சக்திவேல் சந்திரகுமார் என்பருடைய கால்நடைகளே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி மரணித்துள்ளன. இவரது குடும்பத்தில் ஆறு அங்கத்தவர்கள் உள்ளனர். கால்நடைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்திலேயே வாழ்க்கையை அவர் நடத்திவருகின்றார்.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த பிரதேசத்தில், சம்பவ தினத்தன்று கடுமையான மழை பெய்ததுடன், மின்னல் தாக்கமும் ஏற்பட்டது என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நவி


5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago