Editorial / 2018 ஜூன் 15 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
கண்டி- யாழ்ப்பாணம் ஏ- 9 வீதி, தம்புளையிலிருந்து நாவுல வரை செல்லும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள், இரவு நேரங்களில் ஒளிர்வது இல்லை என்றும், இதனால், மாலை வேளைகளில் இவ்வீதி காரிருளில் மூழ்கியிருப்பதாகவும், பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
லெனதொர, பன்னம்பிட்டிய, பொபெல்ல உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களே, இவ்வீதியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
மின் விளக்குகள் ஒளிராமையால், இரவில் இவ்வீதி வழியாக மோட்டார் சைக்கிள்களிலும் சைக்கிள்களிலும் பயணிப்பவர்களும் பாதசாரிகளும், பாரிய சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு வேளைகளில், இவ்வீதியில் விபத்துகளும் இடம்பெற்றுள்ளன எனவும் தெரியவருகிறது.
எனவே, மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago