Kogilavani / 2018 மே 16 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன்
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி, இன்று காலை பயணித்த முச்சக்கரவண்டியொன்று, கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக, கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியில், ஐவர் பயணித்துள்ளனரெனவும் எனினும், இவர்கள் எவ்வித காயங்களுமின்றி உயிர்த்தப்பியுள்ளரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டியே இதன்போது தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago