Kogilavani / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பாரிய மலையகக் கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுத்துச்செல்லவுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், விரைவில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியுடன் தொழிலாளர் தேசிய முன்னணி முடிவடைந்துவிட்டதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சூழ்ச்சிக் காரணமாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னம் இல்லாது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பின்னணயிலேயே, தொழிலாளர் தேசிய முன்னணி என்றக் கட்சியை தான் யாப்பு எழுதி உருவாக்கியதாகவும் இவ்வாறான நிலையில், இ.தொ.காவிலிருந்து வருகைத் தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன் காரணமாகவே, தன்னை அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்தக் கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடாக அடைய நினைத்த அரசியல் இலக்குகளை அடைவது உறுதியென்றும் எதிர்வரும் காலத்தில் பாரிய மலையகக் கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை கட்டியெழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போரை தான் ஒருபோதும் தன்னுடன் இணையுமாறு அழைக்கவில்லை என்றும் முன்னணியிலிருந்து விலகுபவர்களுக்கு, அந்தக் கட்சியை சார்ந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய முன்னணயிலிருந்து விலகி, தமது கொள்கைகளை ஏற்று தன்னுடன் இணைய விரும்புவோரை தான் அரவணைத்துச் செல்ல தயாராகவுள்ளதாகவும் தனது அரசியலை மலையகத்தில் முன்னெடுக்கும் விதம் குறித்து, விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தொழிலாளர் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சகச் செயற்பாடுகளை மக்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026