Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றுத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலத்தில், நல்லிணக்கத்துடன்கூடிய சிறந்த கல்விப் புலமைமிக்க இளம் சந்ததியை உருவாக்கும் எண்ணக்கருவின் அடிப்படையிலேயே, இவ்விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இரத்தினபுரி இறக்குவானை, ஹெதர்லி தோட்டத்திலுள்ள சிறுவர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்பட்ட சாந்தி சிறுவர் இல்லம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், சிறுவரொருவர், ஐந்து வயதில் பாடசாலைக்குக் காலடி எடுத்துவைப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், ஐந்து வயது என்பது, சிறுவர்களின் மனவளர்ச்சிக்கு உரித்தான காலம் என்பதால், சிறுவர்களின் முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தித் தொடர்பில், விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கொள்ளைக்கு அமைவாக, 2,000 முன்பள்ளிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பயிற்சிபெற்ற ஆசிரியர்களையும் முகாமையாளர்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் பலவற்றை தாம் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், எனினும் நல்லிணக்கம் என்பது சிறுவர் பராயத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஏனைய நாடுகளில், முன்பள்ளி சிறுவர் கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினூடாக, சிறுவர்களுக்கு இடையே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்களை இறுக்கமாக்க வுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
17 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago