Kogilavani / 2021 மார்ச் 07 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
மலையகத்துக்கென முறையான தலைமைத்துவம் ஒன்று இன்மையால், மலையகம் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உம்.உதயகுமார் தெரிவித்தார்.
ஹட்டன் டி.கே.டபிள்யூ. கலாசார மண்டபத்தில், இன்று (7) நடைபெற்ற தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கம் முன்நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து 14 மாதங்களும் பொதுத் தேர்தல் முடிந்து 06 மாதங்களும் கடந்துள்ள நிலையில், நாட்டு மக்கள் பல்வேறுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
'அதிகாரத்தைத் தருங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளுக்குப் பாடம் புகட்டுவதாகக் கூறினார்கள். தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தோட்டதுறைமார்களை விரட்டியடிப்பதாகக் கூறினார்கள். ஆனால் இன்று எமது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடக்குமுறைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சில அரசியல்வாதிகள் சுயஇலாபத்துக்காக மக்களை தூண்டிவிட்டதால், இன்று தொழிலாளர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தொழிலாளர் தேசிய சங்கம் என்றுமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்' என்றார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026