2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மூக்கை அழுத்தி மகளை கொன்ற தாய் கைது

Editorial   / 2024 செப்டெம்பர் 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஒரு வயது மற்றும் ஐந்து மாதங்களேயான மகளை மூக்கை அழுத்தி கொன்றதாக கூறப்படும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

  கலாஹா பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது கணவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றதன் பின்னர், சந்தேக நபரான அந்த பெண்ணும், அவரது மகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, அந்த தாய், கோபமடைந்து மகளின் மூக்கு மற்றும் வாயை இறுக்கமாக மூடியதால், மகள் உயிரிழந்துள்ளார் என்று பொலிசார் நடத்திய விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X