ஆ.ரமேஸ் / 2020 மே 07 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது உடம்பில் உயிர் மூச்சு இருக்கும் வரை, இலங்கை தொழிலாளர் காங்கிரசை விட்டு விலகி செல்லவும் மாட்டேன் என்றும் காங்கிரஸ்க்கு எதிராக செயற்படவும் மாட்டேன் என்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் உறுதியாக தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கப்போவதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
நேற்று (06) தவிசாளருக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் ஆனால், தனது தலைவர் ஊடாகவோ அல்லது காங்கிரஸின் உயர் பீடம் ஊடாகவோ அறிவிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தனக்கு எதிரான செய்தியில், தான் காங்கிரஸை விட்டு விலகி மாற்று கட்சி ஒன்றுக்கு தாவப்போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆனால், காங்கிரஸை விட்டு கட்சித் தாவும் வகையில் தன் தலைவர் தன்னை வழிநடத்தவில்லை என்றும் அவ்வாறான அரசியல் பாசறையில் தான் வளர்ந்து வரவில்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்க நிவாரணம் தொடர்பில், அரச அதிகாரிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில், தனக்கு கெட்ட பெயர் உருவாகும் விதத்தில் தான் செயற்படவில்லை என்றும் தவறான கருத்துக்களை தனக்கெதிராக விசமிகள் பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த 5,000 ரூபாய் நிவாரணத் தொகை, மக்களுக்க சரியான முறயைில் சென்றடைகின்றதாக என்பது தொடர்பிலேயே தான் கவனம் செலுத்தியதாகவும் மக்களிடமிருந்து தனக்குக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுத்ததைத் தவிர, வேறு எந்தவொரு தேவையற்ற செயற்பாடுகளிலும் தான் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
57 minute ago
1 hours ago