2026 ஜனவரி 21, புதன்கிழமை

மூலிகைகளுக்குத் தட்டுப்பாடு; ஆயுர்வேத வைத்தியத்துறைப் பாதிப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

மூலிகைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, ஆயுர்வேத வைத்தியத்தியத்துறையைக் கொண்டுநடத்துவதில் பாரிய சிக்கல்நிலை தோன்றியுள்ளதாக, துறைசார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காடுகள் அழிப்பு, மனிதச் செயற்பாடுகள் காரணமாக ஆயுர்வேத தொழிற்றுறைக்கான மூலிகை மரங்கள், செடிகள் கணிசமான அளவு அழிவுக்கு உட்பட்டுள்ளதாகவும் இந்நிலைமை தொடர்ந்தால் ஆயுர்வேத வைத்தியமுறைமை முற்றாக அழிந்து விடுமெனவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிராமப்புற மக்கள், எலும்பு முறிவு உள்ளிட்ட காரணிகளுக்கு ஆயுர்வேத வைத்தியத்தையே நம்பியுள்ளனர் என்றும் எனினும் ஆயுர்வேத மூலிகைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் துறைசார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மூலிகைகளைப் பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X