Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
தற்போதைய சூழ்நிலையில் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தாமரை மொட்டுவைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகவே இருப்பதாக தெரிவித்த விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, எனினும், கட்சியிலிருந்து பலரும் விலகிச்சென்றுள்ளமையால் என்றார்.
மாத்தளையில் கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்ற, கட்சி அங்கத்தவர்களுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தலில் எமது கட்சியின் ஊடாக போட்டியிட்டால் தங்களுக்கு வெற்றிப்பெற முடியாதென நினைத்த பலரும் விலகிச் சென்றுவிட்டனர். அவ்வாறானவர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்து அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறானா செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் பெரும் கட்சிகளுடன் இணையாமல், முடிந்தால் சிறிய,சிறிய கட்சிகளை இணைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுமாறு நான், அவர்களுக்கு சவால் விடுக்கின்றேன் என்றார்.
அவர்களால் வெற்றிப்பெற முடியாது. ஜனாதிபதியின் தெரிவின் போதும் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக பலரும் செயற்பட்டனர். அவ்வாறானவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்.
எனினும், அந்த அரசாங்கத்தில் தாங்கள் பிரபல்யமான அமைச்சுகளை பொறுப்பேற்று செயற்பட்டவர்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர் என்று கூறிய இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, அரசாங்கம் என்றவகையில் பொறுப்புடன் நாங்கள் செயற்படுகின்றோம். உணவு பாதுகாப்பு தொடர்பில் ஆகக்கூடுதலான கவனத்தை செலுத்தி பிள்ளைகள் உள்ளிட்ட ஏனையோருக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட ஏனையவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago