Gavitha / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
உடவளவை, எம்பிலிப்பிட்டிய, ஹம்பகமுவ காட்டு பிரதேசங்களில் அமைந்துள்ள வீதிகளின் இரு மருங்கிலுமுள்ள யானைகளுக்கு உணவு வகைகளை வழங்க வேண்டாம் என, வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு மின் வேலிகளைத் தாண்டி, சில யானைகள் வீதியோரமாக வந்து நிற்பதால், இவற்றுக்கு, பொதுமக்களும் உல்லாசப் பயணிகளும் உணவுப் பொருள்களை வழங்குவதால், பொதுமக்களுக்கு மட்டுமன்றி யானைகளுக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்துவதைப் பின்பற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026