Kogilavani / 2021 மார்ச் 21 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் அமைந்துள்ள புதிய அரசியலமைப்புக் குழுவின் அலுவலகத்தில், இந்த யோசனைத் திட்டம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், சட்டத்தரணி மாரிமுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, மத்திய மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் மதியுகராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல விடயங்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள யோசனைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026