2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

யுவதியை காப்பாற்ற பாய்ந்த இளைஞரைக் காணவில்லை

Editorial   / 2020 மே 21 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்த யுவதியொருவரைக் காப்பாற்ற முயன்ற நபர் காணாமல் போயுள்ளார்.

அத்துடன், நீரில் குதித்த யுவதியை, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார்.

இன்று (21) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

தலவாக்கலைச் சேர்ந்த 23 வயதுடைய  யுவதியொருவர்,  தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்து, நீர்த்தேக்கத்துக்குள் குதித்துள்ளார். இதைக் கண்ட அவ்வழியாகச்சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.

நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே கொண்டுவரும் போது, அவரும் நீரில் மூழ்கியுள்ளார். அந்நிலையில்,  இதைக் கண்ட தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியைக் காப்பாற்றியுள்ளார்.

எனினும், யுவதியைக் காப்பாற்றுவதற்காக முதலாவதாக நீர்த்தேக்கத்துக்குள் குதித்த இளைஞர் காணாமல் போயுள்ளார்.

2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

 காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .