R.Maheshwary / 2023 பெப்ரவரி 16 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, கேதீஸ்
நானுஓயா- ரதல்ல மைதானத்தில் சர்வசே பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக குறித்த மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
ரதல்ல மைதானமானது, திம்புளை விளையாட்டு கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதுடன், அந்த அமைப்பின் இணக்கப்பாட்டுடன் நியுசிலாந்து அணியுடனான போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணி, அப்போட்டிகளுக்கு முன்னர் ரதல்ல மைதானத்தில் பயற்சிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை (17) தொடக்கம் 23ஆம் திகதி வரை இந்த மைதானத்தில் இலங்கை அணி பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.
ரதல்ல மைதானம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் இங்கு முன்னெடுக்கப்படும் பயிற்சிகள் மூலம் நியுசிலாந்து அணியுடனான போட்டிகளை இலங்கை அணி சிறப்பாக முகம்கொடுப்பதற்காக இந்த மைதானத்தை பயிற்சிக்காக வழங்க தம்புளை விளையாட்டு கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



11 minute ago
29 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
5 hours ago