Gavitha / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை பார்க் தோட்ட விவகாரம் தொடர்பில், நுவரெலியா நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் (03) மாலை ஆஜரான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனை, 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு, நீதவான் அனுமதி வழங்கினார்.
அத்துடன். எதிர்வரும் 12ஆம் திகதிக்கு, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.
கந்தப்பளை பார்க் தோட்ட அதிகாரிக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில், உதவி தோட்ட அதிகாரியொருவரைத் தாக்கியமை, சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கந்தப்பளை பொலிஸார், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
அதேநேரத்தில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற வகையில், நீதிமன்றத்தில் முன்னிலையானோரில் மூவர், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ள நிலையில், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர், அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேரக்கு. 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல, நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago