Editorial / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலானது இன்று மாலை 6.30 மணியளவில் பண்டாரவளை- கினிகம ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள சுரங்கமொன்றில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்று தெரிவித்துள்ள ரயில்வே கட்டுபாட்டு நிலையம் இந்த தடம்புரள்வையடுத்து, ரயில் பயணிகள் பஸ்கள் மூலம் பதுளைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணிக்கும் இரவு நேர தபால் ரயில் தாமதமடையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026