Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}


மு.இராமச்சந்திரன்
நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை எரிபொருள் சேமிப்பு நிலையத்துக்கு எரிபொருள் ஏற்றிவந்த ரயில், ஹட்டன் ரயில் நிலையத்துக்கருகில் திடீரென இயந்திரம் இயங்காத நிலையில் பின் நோக்கி நகர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம், இன்று (10) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
11 லீற்றர் 600 மில்லி லீற்றர் டீசல் ஏற்றி வந்த குறித்த ரயில், ஹட்டன் ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களில், திடீரென பின்நோக்கி நகர்ந்துள்ளது. இதனை அவதானித்த ரயில் அதிகாரிகள், உடனடியாக ரயிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
ரயிலின் இயந்திரம் இயங்குவதற்கான காற்றை வழங்கும் குழாய் வெடித்ததாலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த ரயிலின் திருத்தப்பபணிகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago