R.Maheshwary / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலேந்திரன்
லிந்துலை- டில்கூல்ட்ரி தோட்டத்தில் சிறுத்தையான்று, நாய் ஒன்றை, இரண்டு துண்டுகளாக கடித்து துண்டாக்கிய சம்பவம் ஒன்று நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாய் ஒன்றையே, சிறுத்தை இவ்வாறு வேட்டையாடியுள்ளது.
இரவில், தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை கடித்துக் கொல்லும் நிலைக்கு வந்துள்ளதாகவும், இரவில் வீடுகளிலிருந்து வெளியில் வருபவர்களையும் சிறுத்தை தாக்க முயற்சிப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
எனவே, தோட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாற்றத்தை குறைக்கும் வகையில், சிறுத்தைகளை பிடித்து செல்லும் நடவடிக்கைகளை வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .